டில்லி

நேற்றைய மக்களவை கூட்டத்தில் காங்கிரசை சோனியா காந்தி வழி நடத்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பொறுப்பேற்றுள்ளார்.   சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் பை இந்தியா அழைத்ததாக வந்த தகவல் குறித்த விவாதம் நேற்று நடந்தது.  இந்த விவாதத்தின் போது பிரதமர் மோடி அவைக்கு வரவேண்டும் என சவுத்ரி கேட்டுக் கொண்டார்.  ஆனால் அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்தார்.

அப்போது அவையில் இருந்த சோனியா காந்தியிடம் அவைப் பொறுப்பை ஏற்குமாறு சவுத்ரி கேட்டுக் கொண்டார்.   அதன் பிறகு கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடுவில் சென்று பிரதமரை அவைக்கு வர வேண்டும் என குரல் கொடுத்தார்.  இவை அனைத்தும் சோனியா காந்தியின் ஒப்புதலுக்கு இணங்க நடந்துள்ளது.

இதையொட்டி காங்கிரஸுக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்களும் அவை நடுவில் சென்று கோஷமிட்டனர்.  அத்துடன் சோனியா காந்தி இந்த போராட்டம் தொடர சசிதரூர் மூலம் அனுமதி அளித்துள்ளார்.   அதையொட்டி கா?காங்கிரஸ், திமுக, திருணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியின் சோனியா வழி காட்டுதலின் பேரில் போராட்டம் நடத்தி உள்ளனர்.