உத்திர பிரதேசத்தில் மத்திய அமைச்சரின் சகோதரியை கடத்த முயற்சி : பட்டப்பகலில் பயங்கரம்

Must read

பரேலி, உ. பி.

உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி நகரில் மத்திய அமைச்சரின் சகோதரியை காரில் கடத்த சிலர் முயன்றுள்ளனர்.

முக்தார் அப்பாஸ் நக்வி

மத்திய அமைசாரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக உள்ள முக்தார் அப்பாஸ் நக்வியின் சகோதரி ஃபர்ஹாத்.   இவர் உ. பி மாநிலம் பரேலில் நகரில் உள்ள கிலா என்னும் பகுதியில் வசிப்பவர்.   இவருக்கு பெண் குழந்தை பிறந்ததால் இவருடைய கணவர் ஃபர்ஹாத்தை விவாகரத்து செய்து விட்டார்.  தற்போது இவர் விவாகரத்தான் பெண்களுக்கு உதவ ஒரு சமூக அமைப்பை நடத்தி வருகிறார்.  முத்தலாக்கை எதிர்த்தும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தும் போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

இவர் சனிக்கிழமை அன்று காவல்துறை சூப்பிரெண்டெண்ட் அலுவலகத்து வந்து விட்டு வீட்டுக்கு திரும்ப சாலையை கடந்த போது அவர் அருகில் ஒரு கார் வந்து நின்றுள்ளது.  அதில் இருந்தவர்கள் அவரை காரின் உள்ளே பிடித்து இழுத்துள்ளனர்.  .  அது மட்டும் இன்றி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.  மேலும் சில தகாத ஜாடைகளையும் காட்டி உள்ளனர். அங்கிருந்த சில பெண்கள் ஓடி வந்து அவரை வந்து காப்பாற்றி இருக்கின்றனர்.

இது குறித்து போலீசில் ஃபர்ஹாத் புகார் அளித்துள்ளார்.   அவரால் தன்னை கடத்த முயன்றவர்களையோ காரின் பதிவு எண்ணையோ அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளார்.   காவல் துறை சூப்பிரெண்டெண்ட் அலுவலகத்துக்கு எதிரிலும்,  மகளிர் காவல் நிலையத்திலிருந்து சில அடி தூரத்திலும் இந்த நிகழ்வு நடந்துள்ளது.    வழக்கை பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உத்திரப் பிரதேசத்தில் இது போன்ற கடத்தல் முயற்சிகள் சகஜமாகி வருகிறதென்றும்,  அரியானா பா ஜ க பிரமுகரின் மகன் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் மகளை கடத்த முயன்றதையும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்..

More articles

Latest article