கிருஷ்ணகிரி:
ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி பிரியா குடிநீர் தொட்டி முன் துணி துவைப்பதை கண்ட நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு திமுக கவுன்சிலரான சின்னசாமி சத்தம் போட்டுள்ளார்.

அப்போது ராணுவ வீரர் பிரபாகரனுக்கும், கவுன்சிலர் சின்னச்சாமி ஆதரவாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலத்தகாயம் அடைந்த பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் திமுக கவுன்சிலர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.