சென்னை: இன்று மாலை பகுதி சூரிய கிரகணம் நடைபெறுகிறது. இதை  வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இன்று மாலை 4 மணிக்கு பகுதி சூரியகிரகணம் நிகழவுள்ளது. ரஷ்யாவின் தெற்கு பகுதிகள், கஜகிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை காணலாம். உலக அளவில் சூரிய கிரகணம் 14:19 மணிக்கு தொடங்கி 18:32 மணிக்கு முடியும். ரஷ்ய நாட்டின் மத்திய பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.

இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் இன்று தென்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும். அதிக நேரம் இந்தியாவில் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும். அதிகபட்சமாக குஜராத் மாநில துவாரகாவிலும், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் குறைந்தபட்சமாக 12 நிமிடங்களும் இந்த சூரிய கிரகணம் தென்படும்.  மும்பை, புனே, தானே, டெல்லி, ஆமதாபாத், சூரத், ஜெய்பூர் இந்தூர், போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜெய்ன், மதுரா, போர்பந்தர், காந்திநகர், சில்வாசா, பனாஜி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக சூரிய கிரகணம் தென்படும்.

நாடு முழுவதும் இன்று மாலை சூரிய கிரகணம் தென்படுகிறது;  சென்னையில் 5.14 மணிக்கு தொடங்கி 5.50 மணிக்கே முடிந்துவிடும். இதை வெறுங்கண்களால் பார்க்க கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களைக் கொண்டு பாா்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்கலாம்.

கிரகணத்தை காண பிர்லா கோலரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு சென்று தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தை பார்க்கலாம். மேலும், கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும்.

சென்னையில் 5.14 மணிக்கு தொடங்கி 5.50 மணிக்கே முடிந்துவிடும், அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2022ம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் 25ம் தேதி  நிகழ்கிறது! வெறும் கண்ணால் பார்க்ககூடாது என எச்சரிக்கை…