சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் தன்னிடம் இருந்து ரூ. 25000 பணம் பறித்ததாக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மொபைலில் தொடர்பு கொண்டு தன்னிடம் பாலியல் ரீதியாக கவர்ச்சியாக பேசிய அந்த பெண், தான் வீட்டில் தனியாக இருப்பதாகக் கூறி தன்னை வீட்டுக்கு வரவழைத்ததாக அந்த புகாரில் கூறியுள்ளார்.

இதை நம்பி அங்கு சென்ற நபரிடம் அங்கு பதுங்கியிருந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவர்களது நண்பர் என மூன்று பேரும் சேர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

தன்னிடம் இருந்த ரூ. 25000த்தை ஆன்லைன் டிஜிட்டல் பேமென்ட் வழியாக அனுப்பிய அந்த நபர் அவர்கள் கேட்ட மீதி தொகையை அனுப்பிவைப்பதாகக் கூறி அங்கிருந்து நைசாக நழுவியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த பெண் உள்ளிட்ட மூன்று பேர் மீது மிரட்டி பணம் பறித்ததாக காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.