அதிமுக-வைச் சேர்ந்த 14 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மொத்தம் 19 பேர் டெல்லியில் இன்று மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.

இவர்களை டெல்லி அழைத்துச் சென்று பாஜக முக்கிய நிர்வாகிகள் முன் கட்சியில் சேர்த்துக் கொள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக-வைச் சேர்ந்த அவிநாசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஏ. கருப்பசாமி தான் பாஜக கட்சியில் சேரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தனது பெயர் பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் எப்படி வந்தது என்பது தனக்கு தெரியவில்லை என்று கூறிய அவர் 2011ம் ஆண்டு தனக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து சட்டமன்ற உறுப்பினராக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

2016 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் அதன் பின் எடப்பாடி தலைமையில் அதிமுக-வில் இயங்கி வருகிறேன் என்று தெரிவித்த கருப்பசாமி எனது உயிருள்ளவரை அதிமுக-வில் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.