சென்னை

இதுவரை சென்னை எண்ணூர் கடலில் கசிந்த எண்ணெயில் இருந்து சுமார் 40 டன் எண்ணெய் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை எண்ணூர் கிரீக் நகர் பக்தியில் சென்னை எண்ணூர் கிரீக் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மிக்ஜம் புயல் மழையின்போது எண்ணெய் கசிவு ஏற்பட்டுக் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரில் கலந்தது. எண்ணெய் கசிவு பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றைக் கடந்து கடலில் கலந்ததால் மீனவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

எனவே இந்த எண்ணெய் கசிவை விரைந்து அகற்றத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலில் கசிந்த எண்ணெய்யை அகற்றச் சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதுவரை 40 டன் எண்ணெய் கழிவுகளை சி.பி.சி.எல். நிறுவனம் அகற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து மொத்தமாக எவ்வளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய ஐ.ஐ.டி. பேராசிரியர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.