மேஷம்

எந்த விஷயத்துலயும் இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை  வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவாங்க. வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பெண்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீங்க

ரிஷபம்

கலைத்துறையிலும் ஆன்மிகத்திலும் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். மகன் அல்லது மகளோட  கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகைகளிலும் நன்மை உண்டாகும்.  இழுபறியா இருந்துக்கிட்டிருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான டெஸிஷன் எடுப்பதன் மூலம் பிரச்சனைங்களுக்குத் தீர்வு கிடைக்கும். கவர்ன்மென்ட் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். தொழிலில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். எந்த விஷயமும் கொஞ்சம் ஸ்லோவா நடக்கும். தங்கம் வாங்குவீங்க.

மிதுனம்

மனசை அரிச்சுக்கிட்டிருந்த பாரம் குறையும். குடும்பத்துல இதமான சூழ்நிலை  காணப்படும். இழுபறியா இருந்துக்கிட்டிருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். கலைத்துறையினருக்கு  எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது பெட்டர்.  காரிய அனுகூலம் உண்டாகும். முன்பைவிட எதுவும் சிறு தடைகளுக்குப் பிறகு முடியும்னாலும் பொறுமையா செய்யும் எந்த விஷயமும் உங்களைக் கவிழ்க்காது. உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பாங்க. அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பேச்சினால் நன்மை ஏற்படும்.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவும் கவனமா இருங்க

கடகம்

வாக்கு வன்மையால் நன்மைல்லாம் உண்டாகுங்க. செய்யற காரியத்தை சிறப்பா,  நேர்மையா செய்து முடிச்சு மத்தவங்ககிட்ட பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்களோட செல்வாக்கைக்  கண்டு பொறாமை உண்டாகலாம். டோன்ட் ஒர்ரி.   எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்துல ஈடுபட்டு இருக்கறவங்க கொஞ்சம் விழிப்புடன் இருக்கறது நல்லது. நீங்க பிசினஸ் செய்யறவங்களாயிருந்தா, பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பற போது கூடுதல் கவனம் செலுத்துறது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர டிலே ஆகலாம். ஆபீஸ் போறவங்க அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். ஸோ வாட்.. அதுனால வரவு அதிகமாகும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். அக்கம்பக்கத்துல இருக்கறவங்க செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தைக் கடைபிடிங்க.. வீண் பிரச்னை ஏற்படாமல்  தடுக்கும். அவங்களும் பிறகு ஃப்ரெண்ட் ஆவாங்க.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவும் கவனமா இருங்க

சிம்மம்

மனசுல அமைதியும் நிம்மதியும் உண்டாகும். ரிலேடிவ்ஸ் ஆதரவு உற்சாகத்தை கொடுக்கும். பிசினஸ்ல நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழிலாளர்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுப்பாங்க. தேவையில்லாத செலவுகளை இழுத்துக் கொள்ளாதீங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் பற்றி எச்சரிக்கையாக இருங்க எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கெடைச்சுடும். டோன்ட் ஒர்ரி. வெளியூர் பயணங்களில் மூலமாக தொழிலுக்கு தேவையான ஆர்டர்களை பெறுவீங்க. வீட்டுல ஆடம்பரமாக விருந்து நிகழ்ச்சிங்களை நடத்துவீங்க. மங்களகரமான காரியங்களுக்காக செலவு செய்வீங்க. திருமணத்திற்கு தேவையான ஆடை அணிமணிகள் தங்க நகைகள் வாங்குவீங்க. யாருக்காகவும் எதுக்காகவும் கவலைப்படாம வியாபாரத்துல மட்டும் சிரத்தையுடன் கவனத்தை செலுத்துவீங்க. சகோதர சகோதரிங்களுக்கு உதவி செய்வீங்க. எடுத்த காரியங்களில் சுலபமா வெற்றி பெறுவீங்க.

சந்திராஷ்டமம்: டிசம்பர் 19 முதல் டிசம்பர் 21 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவும் கவனமா இருங்க

கன்னி

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் குறைஞ்சு நிம்மதி பிறக்குங்க.  அதுமட்டுமில்லை.. பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் குடுங்க. அது ஒங்களுக்கு நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீங்க.  உத்யோகத்தில்  மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாகப் பேசி நல்ல பெயர் வாங்கிடுவீங்க. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லதுங்க. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை.கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்த்துடுங்க. தட் இஸ் இனஃப்.

துலாம்

ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் கொஞ்சமே கொஞ்சம் எச்சரிக்கை தேவைங்க. எதிலும் முன்னேற்றம் காணப்படும்.உடல் ஆரோக்கியம் பெறும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். உத்யோகத்துல இருக்கறவங்களோட செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அது பத்திக் கவலை வேணாங்க. குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும். லேடீஸ்க்கு வழக்கத்தை விடக் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பட் அதை உற்சாகமாய்ச் செய்வீங்க. பொருள் வரத்து கூடும்.கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக்கணும்னு நினைவுல  வெச்சுக்குங்க.

விருச்சிகம்

மனசுல திருப்தியோட செயலாற்றுவீங்க. புத்திசாதூரியம் மூலம் சக்ஸஸ் கெடைக்கும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும்  உற்சாகத்தை கொடுக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்குக் கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியவங்களோட ஆலோசனைபடி செயல்படுவது நல்லது. அனுபவசாலிங்களை கன்சல்ட் செய்ங்க. எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்பை பெறுவீங்க. குடும்பத்தில்  சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீங்க. பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

சகோதர சகோதரிகளிடையே நெருக்கமும் பாசமும் பந்தமும் அரவணைப்பும்  அதிகரிக்கும். பிசினஸில் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீங்க. கலைத்துறையினர் மனதிருப்தியுடன் சாதனைகள் செய்து சாதகமான பலன் பெறுவர். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள்  மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். தடைபட்டு வந்த விஷயங்கள்  சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்யோகத்துல இருக்கறவங்க நேர்மையாவும் சிறப்பாயும் பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவர். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

மகரம்

தேவையான ஹெல்ப் தக்க சமயத்துல கெடைக்கும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. பிசினஸ்லயும் ஷேர் மார்க்கெட்லயும் லாபம் உண்டாகும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டாலும்கூட அதெல்லாம் க்விக்கா மறையும். சின்னச் சின்ன செலவுங்களை சந்திக்க நேரிடலாம். மனசுல உள்ள தைரியத்தால அநாயாசமாய் வெற்றி காண்பீங்க. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும்.மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீங்க. மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லதுங்க.

கும்பம்

தொழில் வியாபாரத்துல எதிர்பார்த்த முன்னேற்றம் கெடைக்கும். எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். ஆனா ஷ்யூரா முடிச்சுடுவீங்க.  கவலையே வேணாம். உத்யோகத்துல  இருக்கறவங்க கொஞ்சம் கேர்ஃபுல்லா பணியாற்றுவது நல்லது.  புதிசா  வேலை  தேடறதுக்குச் செய்யற முயற்சிகளுக்குப் பலன் கெடைக்கறதுல கொஞ்சம் டிலே ஏற்படலாம். குடும்பத்துல சுமுகமான சூழ்நிலை உண்டாகும். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிச்சாலும் அதற்கு ஏற்ற வருமானமும் இன்கிரீஸ் ஆகும். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடிச்சுடுவீங்க. வாகன யோகம் உண்டாகும். ஸ்டூடன்ட்ஸ்க்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

மீனம்

எதிர்பார்த்த விஷயங்களில் சக்ஸஸ் உண்டுங்க. புத்தி சாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது பெட்டர். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்னை தலை தூக்கும். பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீங்க. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு தொழில், வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நிதானமாக பேசுவது நன்மை தரும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். ஹாப்பியான விஷயங்கள் நடக்கும். வருமானம் கூடும்.