சென்னை: தமிழகத்தில் இதுவரை 1,077  குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாக வும், கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 37ஆயிரம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும்  தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு நாள்கு நாள் அதிகரித்து வருகிறது.  தினசரி 6ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. சென்னையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை 37 ஆயிரம் குழந்தைகளுக்கு  பல்வேறு நோய்கள் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போதுவரை,  சுமார் 37,000 குழந்தைகள் அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அவர்களில் 1,077 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மேலும்,  20,550 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.
1,347 பேருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளதாகவும், 437 நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டுள்ளதாகவும்  சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4ஆயிரத்து 154 கர்பிணிகளுக்கு அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாகவும், 37,436 குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.