மாஸ்கோ

ஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது.

தற்போது வட இந்தியாவில் கடும் பனிமூட்டம் உள்ளது.    இதனால்  மக்கள் பெருமளவில் துயருற்று வருகின்றனர்.  வழக்கமாக இல்லாத அளவுக்கு பனி மூட்டம் உள்ளதாக டில்லி வாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.   இந்த பருவ மாறுதல் இந்தியாவில் மட்டும் இன்றி வேறு நாடுகளிலும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ரஷ்ய நாட்டிலும் இப்போது வரலாறு காணாத அளவுக்கு பனி பொழிந்து வருகிறது.   தலைநகர் மாஸ்கோவில் வெப்ப நிலை -10 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சென்றுள்ளது.     பனி மலை போல் சாலை எங்கும் குவிந்துள்ளது.   இதனால் வாகனங்கள் ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமையும் பெய்த அளவு பனிப் பொழிவு நேற்று ஒரே நாளில் பெய்துள்ளதாக ரஷ்ய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

கடந்த 60 வருடங்களாக இவ்வளவு பனிப்பொழிவு நடந்ததில்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.    பனியால் பல இடங்களில் மரங்கள் பிடிப்பின்றி வேரோடு சாய்ந்துள்ளன.   சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.     ஒரு சில விமானங்கள் மட்டும் காலதாமதாக புறப்பட்டுள்ளன.