வாஷிங்டன்:

அமெரிக்க குடிமக்களுக்கே பணி முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். அதோடு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா போன்வற்றிலும் கெடுபிடிக்கள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தகுதி அடிப்படையில் குடியேற்ற விதிகள் வகுக்க வேண்டும் என்று டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்கு ஆதரவாக வெள்ளை மாளிகை முன் இன்று பேரணி நடந்தது. இதில் இந்திய தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவரும் அமெரிக்க குடியுரிமை பெற விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருப்பவர்கள் ஆவர். புளோரிடா, நியூயார்க், மாசாசூசெட்ஸ் உள்பட பல நகரங்களை சேர்ந்த இந்தியர்கள் பங்கேற்றனர்.