லஞ்ச வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம்சங் நிறுவன துணைத்தலைவர் விடுதலை

Must read

சியோல்:

தென் கொரியாவில்,   ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி  அதிபருக்கு லஞ்சம் கொடுத்த புகாரை தொடர்ந்து பிரபல எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், லீ ஜே யாங்  மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தண்டனை காலத்தை இரண்டரை ஆண்டுகளாக குறைத்தும், லீ ஜே யாங்-யை விடுதலை செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.

தென்கொரியாவில் தொண்டு நிறுவனங்களுக்கு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெரும் தொகைகளை நன்கொடை பெற்றதாக அதிபர் அதிபர் பார்க் கியுன் ஹை மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதிபர் பார்க் கியுன் ஹையின் நெருங்கிய தோழி, சோய் சூன் சில், தனக்கும் அதிபருக்கும் உள்ள தொடர்பை பயன்படுத்தி பல மோசடிகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்ததால், அதிபரை  6 மாத காலத்துக்கு இடை நீக்கம் செய்து  அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஊழல் குறித்து,  6 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இதில் குற்றச்சாட்டு உறுதிபடுத்தப் பட்டதால், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்மா, லீ ஜே யாங்குக்கு  5 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, நீதிபதிகள் அவர்மீதான   தண்டனை காலத்தை இரண்டரை ஆண்டுகளாக குறைத்தும், லீ ஏ ஜாங்-யை விடுதலை செய்தும் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த ஊழல் வழக்கில் முன்னாள் அதிபர் பார்க் கியுன் ஹை மற்றும் அவரது நெருங்கிய தோழி, சோய் சூன் சில் ஆகியோரைதான் முக்கிய குற்றவாளிகளாக கருத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ஏற்கனவே கீழ்கோர்ட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம்சங் அதிகாரிகள் 4 பேரையும்  விடுதலை செய்தும், இருவரின் தண்டனை காலத்தை பாதியாக குறைத்தும் தீர்ப்பளித்துள்ளனர்

More articles

Latest article