மாலே:

மாலத்தீவில் அவசர நிலையை அதிபர் அப்துல்லா யாமின் பிரகடனம் செய்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதனை அதிபர் யாமின் ஏற்க மறுத்தார். இதனால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதிபருக்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததால் இந்தியாவின் உதவியை அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நாடியிருந்தார்.

இதை தொடர்ந்து அவசர நிலையை அதியர் யாமின் பிரகடனம் செய்துள்ளார். 15 நாட்களுக்கு இது அமலில் இருக்கும் என்று அதிபர் யாமின் அறிவித்துள்ளார்.