ஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்குத் திருமணம்….!

Must read

ஜூலை 29-ம் தேதி பாடலாசிரியர் சினேகனுக்குத் திருமணம் நடைபெறவுள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ளார் சினேகன். நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலும், சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்

இந்நிலையில் ஜூலை 29-ம் தேதி நடிகை கன்னிகாவிற்கும் திருமணம் செய்யவுள்ளார் சினேகன். இதனை சினேகன் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உறுதிப்படுத்தியுள்ளார்.

“கவிஞர் சினேகன் கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார். மறைந்த எம்.என். மூலம் அறிமுகமானவர். இனிய நண்பர். வரும் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன் இல்லறமேற்கும் அவருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்”என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தொல்.திருமாவளவன்.

More articles

Latest article