சென்னையில் சினேகன் – கன்னிகா ரவியின் திருமணம் இன்று நடைப்பெற்றது. இவர்கள் திருமணத்தை நடிகர் கமல் ஹாசன் முன்னின்று நடத்தி வைத்தார். இந்தத் திருமணத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், மநீம-வின் பழ.கருப்பையா உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். அர்ச்சகர் இல்லாமல் நடைப்பெற்ற இந்தத் திருமணத்தில் கமல் தாலி எடுத்துக் கொடுக்க, அதை கன்னிகாவின் கழுத்தில் கட்டினார் சினேகன். இதைத் தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.