இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்றும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை இந்த படத்தின் ரிலிஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் உரிமையுடன் இணைந்து தொலைக்காட்சி உரிமையையும் விஜய் டிவிக்கு கேட்டது ஹாட்ஸ்டார் நிறுவனம். ஆனால், தயாரிப்பு நிறுவனமோ தொலைக்காட்சி உரிமையை சன் டிவிக்கு கொடுத்துவிட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘இன்னும் சில நாட்களில் டாக்டர் படத்தின் அப்டேட் வெளியாகும். எல்லோரும் சிரிக்க தயாராகுங்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் டாக்டர் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகவும், அதையடுத்து நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.