நோ டென்ஷன்! வீடு தேடி வரும் 2000 ரூபாய்!

Must read

செல்லத்தக்க ரூபாய் நோட்டுக்காக மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்திருந்து நொந்துபோய் கிடக்கிறார்கள். இந்த டென்சனை குறைக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது   ஸ்நாப்டீல் ஆன்-லைன் நிறுவனம்,

அதாவது, வாடிக்கையாளர்கள் வீட்டுக்ககே ரூ. 2 ஆயிரம் பணத்தை தருமாம் இந்த நிறுவனம். இதற்காக ஸ்நாப்டீல் நிறுவனம் கேஷ்@ஹோம் சேவை என்ற தளத்தை தனது இணையதளத்தில் உருவாக்கி உள்ளது.
இந்த தளத்தில் சென்று, ரூ.2 ஆயிரம் ஆர்டர் செய்தால், ஆர்டர்  செய்ய வேண்டும். அதன் பிறகு, நிறுவனத்தின் நபரே வீட்டுக்கு வருவார். அவரிடம் இருக்கும் ஸ்வைப்பிங்மெஷினில் நமது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை ஸ்வைப் செய்ய வேண்டும்.  உடனடியாக, 2000 பணம் அளிக்கப்படும்.  இதற்கான கட்டணமாக ஒரு ரூபாய் மட்டுமே ஸ்நாப்டீல் நிறுவனம் வசூலிக்கிறது.
ஸ்வைப்பிங் மெஷின் இந்த குறிப்பிட்ட வங்கியின் கார்டுதான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை கிடையாது. எந்த வங்கியின்கார்டுகளையும் பயன்படுத்தலாம். அதே நேரம், ஒரு நபர் 2000 ரூபாய் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும்.
இது குறித்து ஸ்நாப்டீல் நிறுவனத்தின் நிறுவனர் ரோகித்பன்சால் தெரிவித்ததாவது:
“தற்போது நாட்டில் டிஜிட்டல்  பரிமாற்றத்துக்கான விழிப்புணர்வு நடந்து வருகிறது.  அதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்” என்றார்.
 
 

More articles

Latest article