த்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது கணவருக்காக எக் பிரைடு ரைஸ் செய்ததாக கூறி, அதற்கான படத்துடன் கூடிய மெனுவை இன்ஸ்டாகிராமில் பதிந்துள்ளார். இது வைரலாகி வருகிறது…

கணவருன் அமைச்சர் ஸ்மிரிதி இரானி

மோடி தலைமையிலான அமைச்சரவையில்  ஜவுளி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக இருந்து வருபவர் ஸ்மிரிதி இரானி. தொடக்கத்தில் நடிகையாக இருந்தவர், படத்தயாரிப்பாளர் மட்டுமின்றி சிறந்த ஓவியரும்கூட.

இவர் தனது ஓய்வு நேரத்தில், தனது ஆசை கணவருக்காக எக் பிரைடு ரைஸ் தயார் செய்தாக கூறி, அதற்கான மெனுவுடன் கூடிய புகைப்படங்களை தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது… 

அவரது இன்ஸ்டாகிராம் படத்தின்படி… 

படம் 1ல் இஞ்சி, கேரட் மற்றும் வெங்காயத்தை நன்றாக நறுக்கவும்.

படம் 2: வசந்த வெங்காயத்தை நறுக்கவும்

படம் 3: ஷிடேக் காளான்களை சூடான நீரில் ஊற வைக்கவும்

படம்  4: அரிசியை வேகவைக்கவும்

படம் 5: காய்கறிகளை முட்டையுடன் சேர்த்து மென்மையாக வறுக்கவும். “ஓவர் டூ டூ” என்று திருமதி இரானி எச்சரித்தார்.

படம் 6: அரிசி, சிப்பி சாஸ், லைட் சோயா சாஸ், உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும்.

படம்  7: முட்டை வறுத்த அரிசியை அனுபவிக்கவும்.

ஸ்மிரிதி  இரானியின் இந்த புகைப்படுத்துடன் கூடிய சமையல் குறிப்பு வைரலாகி வருகிறது…

ஏற்கனவே  தனது மகளுக்கு ஹக்கா நூடுல்ஸ் மற்றும் சிக்கன் மஞ்சூரியன் ஆகியவற்றைத் செய்துள்ளதாக தெரிவித்துள்ள , இரானி கடந்த செவ்வாயன்று தனது கணவர் ஜூபின் இரானிக்கு எக் பிரைடு ரைஸ் செய்து, அதை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, தன்னை தொடர்பவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார்…

ஸ்மிருதி இரானியை இன்ஸ்டாகிராமில் சுமார்  7 லட்சம் பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.