ஸ்மிரிதி ராணி எம்.பி.யை காணவில்லை’’-போஸ்டரால் பரபரப்பு

கடந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், பா.ஜ.க.வின் ஸ்மிருதி ராணி.

இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார். ஸ்மிருதி ராணியை விமர்சித்து, அந்த தொகுதியில் இப்போது கருப்பு.- வெள்ளையில் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘’

அமேதி தொகுதி எம்.பி. ஸ்மிருதி ராணியை காணவில்லை’’ என்ற தலைப்பிட்டு அந்த போஸ்டர்கள் தொகுதி முழுக்க ஒட்டப்பட்டுள்ளன.

‘’ கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு நாட்கள் வந்திருந்து இரண்டு மணி தங்கி இருந்து, அமேதியில் உங்கள் இருப்பை பதிவு செய்தீர்கள்.. அதன் பின் எங்கே சென்றீர்கள்?’’ என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.

’ அமேதி தொகுதி உங்களுக்குச் சுற்றுலாத் தலமாகப் போய் விட்டதா?’’ என, இன்னொரு போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த போஸ்டரை அச்சடித்தவர்கள யார் என்று தெரியவில்லை.

‘கொரோனாவால் தொகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில் ஸ்மிருதி ராணி இங்கே வரவேயில்லை’’ எனப் புகார் பட்டியல் வாசிக்கிறார்கள், அமேதி மக்கள்.