சென்னை: பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புக்கான “புன்னகை திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று  தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இன்று சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் செய்தியளார்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் காய்ச்சல் நோய் தடுக்க நாளை (10ந்தேதி) மாநிலம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின், பள்ளி சிறார்களின் பல் பாதுகாப்பு திட்டமான புன்னகை திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. புன்னகை திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன் , அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்தின், முதற்கட்டமாக 6,7,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு ஏற்படும் வாய்வலி தொற்று நோய்களை தடுக்க புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் காய்ச்சல் நோய் தடுக்க நாளை (10ந்தேதி) மாநிலம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. காய்ச்சல் பாதித்தவர்கள் இந்த முகாம்களுக்கு சென்று சிகிச்சை பெறலாம்.  காய்ச்சல் பாதித்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றவர்,  H3N2 காய்ச்சல் வந்தால் 3 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் போதுமானது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.