தமிழகத்தில் மே 3-க்கு பிறகு ஊரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஊரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் என பெரிய படங்கள் வர காத்திருப்பதால் சிறு பட்ஜெட் படங்களுக்கு கடும் நெருக்கடியாகவே இருக்கும்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் போதே திரையரங்கில் இருந்து நீக்கப்பட்ட ‘தாராள பிரபு’ திரைப்படம் தற்போது OTT ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

இதை மனதில்கொண்டு ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ள சிறு பட்ஜெட் படங்களை வாங்க OTT நிறுவனங்களும் நேரடியாக OTT-யில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஊரடங்கால் OTT தளங்களின் பயன்பாட்டு முன்னெப்போதும் இல்லாத அளவு 56 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.