தஞ்சை:
ஞ்சை அருகே 15 வயது சிறுவன் அடமானம் வைக்கப்பட்டு கொத்தடிமையாக நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  அலையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், ஆவணம் பகுதியில் 15 வயது சிறுவன் கொத்தடிமையாக ஆடுகளை மேய்த்துகொண்டு இருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, காவல்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் சைல்டு லைன் அமைப்பினர் ஆவணம் பகுதிக்கு சென்று விசாரணை செய்தார்கள்.

அடமானம் வைக்கப்பட்ட சிறுவன்
அடமானம் வைக்கப்பட்ட சிறுவன்

அப்போது, சின்னதம்பி என்ற சிறுவன் 10 ஆயிரம் ரூபாய்க்காக அடகு வைக்கப்பட்டதும், அவன்  கொத்தடிமையாக  நடத்தப்பட்டதும்  தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை மீட்ட அதிகாரிகள் குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர்.   இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படம் நன்றி: நியூஸ் 7 தமிழ் சேனல்