சேலம்:
மலூர் அருகே மோட்டார் வாகன ஆய்வாளரை தாக்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே  மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்  உள்ளது.  இங்கு டிரைவர்களுக்கு லைசென்ஸ், எல்எல்ஆர் வழங்கப்பட்டு வருகிறது.  வாகன ஆய்வாளராக சிவகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.  அவர் டிரைவர் லைசென்ஸ் பெற வந்தவர்களை சோதனை செய்து கொண்டு இருந்தார்.
news7
அங்கு வந்த தமிழ்ச்செல்வன் என்பவர், ஆய்வாளர் சிவகுமாரிடம், ஆய்வில் கலந்து கொண்ட அனைவரையும் வெற்றி பெற்றதாக அறிவித்து ஓட்டுனர் உரிமம் வழங்குமாறு தகராறு செய்தார். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதன் காரணமாக அவருடன் வந்த 4 பேர் சேர்ந்து வாகன ஆய்வாளர் சிவக்குமாரை தாக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு வாகன ஓட்டுநர் உரிமம் வாங்க வந்தவர்கள், மற்றும் அருகிலிருந்து பொதுமக்கள் அவர்களை பிடித்து வைத்து, போலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்தனர்.