எலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மான்ஸ்டர்’ . யாருக்கும் தீங்கு செய்யாத ஒருவனுக்கு எலி எப்படி வில்லனாக வருகிறது? இறுதியில் அதை அவன் கொன்றானா? என்பதை தான் இப்படம்.

நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகி பிரியா பவானி ஷங்கர், நானும், எஸ்.ஜே.சூர்யா படத்தைப் பார்த்து வளர்ந்தவள் தான் என்று கூறினார்.

இதையடுத்து பேசிய எஸ்.ஜே.சூர்யா, நான் பல புலிகளுக்கு வில்லனாக நடித்துவிட்டேன். இந்தப் படத்தில் எலியுடன் நடித்திருக்கிறேன் , சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது.என கூறினார் .

எஸ்.ஜே.சூர்யா நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’.

குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய விதத்தில் உருவாகியுள்ள ‘மான்ஸ்டர்’ வரும் மே 17 ஆம் தேதி வெளியாகிறது