மும்பை

பிரதமர் மோடிக்கு ஆதரவு அளித்த பால் தாக்கரேவின் கட்சியை பாஜக அழிப்பதாக சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா 2 ஆக உடைந்து உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி என பிரிந்து உள்ளது. பாஜகதான் கட்சி உடைந்ததற்கு பா.ஜனதா தான் முக்கிய காரணம் என சிவசேனா குற்றம்சாட்டி வருகிறது.  பஜக தலைவர் ஜே பி நட்டா கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனா உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் அழிந்துவிடும் என பேசியிருந்தார்.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில்,

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்குப் பிறகு ஒட்டு மொத்த உலகமே அப்போதை அந்த மாநில முதல்-மந்திரி மோடிக்கு எதிராக நின்றது, அப்போது இந்துதுவாவுக்காக மோடிக்கு ஆதரவாக இருந்தவர் பால் தாக்கரே ஆவார் குஜராத் கலவரத்தின் போது அவரது சொந்த கட்சியினரே அவருக்கு ராஜ தர்மத்தைப் பற்றி யோசனை கூறினர்.  

ஆனால் அந்த நேரத்தில் ‘ ராஜ தர்மத்தை ஓரமாக வையுங்கள், மோடி மீது கைவைக்கக் கூடாது. அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக் கூடாது ‘ என கூறியவர் சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆவார். மோடிக்குக் குஜராத் கலவரத்திற்குப் பிறகு பால் தாக்கரே தான் ஆதரவாக நின்றார்.

தற்போது பாஜக சிவசேனாவை அழிக்க விரும்புகிறதா? .சுமார் 25 ஆண்டுகளாக சிவசேனா பாஜகவைத் தோளில் சுமந்து வந்தது.  தற்போது 2 கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இன்று பாஜக மகாராஷ்டிராவில் பால்தாக்கரேவின் பெயரைப் பயன்படுத்தி வருகிறது. சிவசேனாவுடன் மோத முடியாது என்பதால், பாஜக அமலாக்கத்துறை மூலம் பயம் காட்டி கட்சியை உடைத்து உள்ளனர். பால் தாக்கரேவின் சிவசேனா மீண்டும் வான் உயரத்தை அடையும்.”

எனச் செய்தி வெளியிட்டுள்ளது.