சென்னை: பாலியல் புகார் காரணமாக  கைது செய்யப்பட்டுள்ள சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் 2 ஜாமீன் மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளரான சாமியார் சிவசங்கர் பாபா,  பள்ளி மாணவிகளுக்க பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர்மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர்மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என சிவசங்கர் பாபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டியிருந்ததை எதிர்த்து ஜாமீன் கோரியிருந்தார்.  இந்த மனுக்களை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி. அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து 2 ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.