சென்னை: கோவில்களில் ஏற்கனவே பணியாற்றும் அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள், அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று  அமைச்சர் சேகர்பாபு உறுதி அளிததுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த கோவில்களில்,  அனைத்து சாதி அர்ச்சகர்  திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழில் அர்ச்சனை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு பலர் வரவேற்பும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதால், ஏற்கனவே பணியில இருந்த அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் பரவின.

இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வழக்கு தொடருவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு. முறையாக பயிற்சி பெற்ற 58 பேர் அரச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளன என்று கூறியவர்,  வயது மூப்பிற்கு பின்பும் சில கோயில்களில் அர்ச்சகர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று கூறியவர் தற்போது புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதால், ஏற்கனவே அர்ச்சகர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விளக்கம் அளித்தார்.

தமிழக அரசு நியமனம் செய்த 58 அர்ச்சகர்கள் தொடர்பாக சிலர் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று கூறியவர்,  ஓதுவராக நியமிக்கப்பட்டுள்ள பெண் முறையாக பயிற்சி பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படவில்லை. அரசியல் சட்டத்தை இந்து அறநிலையத்துறை எங்கும் மீறவில்லை என்றதுடன், இதுதொடர்பான மிரட்டலுக்கு பணியும் அரசு அல்ல திமுக அரசு என கூறினார்.