சிவகார்த்திகேயன் – பாண்டேவை கலாய்த்த நடிகர் விவேக்!

Must read

டிகர் சிவகார்த்திகேயன் தந்தி டிவி நெறியாளர் பாண்டே ஆகியோரை கலாய்த்து நடிகர் விவேக் ட்விட்டியிருக்கிறார். இது வைரலாகி பரவி வருகிறது.

விவேக் - சிவகார்த்திகேயன் - பாண்டே
விவேக் – சிவகார்த்திகேயன் – பாண்டே

ரெமோ சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி மேடையிலேயே அழுதார். இந்த படத் தயாரிப்பாளருக்கு ஒரு கார் கூட இல்லை என்று சொல்லி மேலும் அழுதார்.
அழுத கையோடு.. ஸாரி, கண்களோடு தந்தி டிவியில் பாண்டே நடத்தும் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.
 
“இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்று சிவகார்த்திகேயன் சொன்னார். மிக வற்புறுத்தி அழைத்து வந்தோம்” என்று அந்த நிகழ்ச்சியிலேயே பாண்டே தெரிவித்தார்.
இதை, நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்தார்கள்.
மீம்ஸ்களையும் உலவவிட்டார்கள்.
அதில் ஒரு மீம்ஸ், நடிகர் விவேக் சொல்வது போன்று இருந்தது.
a
“ அடப்பாவிகளா நமக்கு தினமும் சோறுபோடுற விவசாயிங்க தற்கொலை செய்துக்கிறாங்க.. அதுக்கு காரணம் யார்னு ஒரு விவாதமாவது பண்ணியிருக்கீங்களா” என்று விவேக் பேசுவது போல இருக்கிறது அந்த மீம்ஸ்.
இதை பார்த்த விவேக்குக்கு என்ன தோன்றியதோ,  ‘மீம்ஸ் போடும் இளைஞர்களின் நகைச்சுவை அதி அற்புதம்!” என்று தலைப்பிட்டு இந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஒரே நேரத்தில் சிவகார்த்திகேயன், பாண்டே இருவரையும் கலாய்த்து விவேக் பதிவிட்டது இப்போது வைரலாக பரவி வருகிறது.

More articles

Latest article