பைரவா – முதல் முன்னோட்டம்..!

Must read

14690951_1142843742450255_5265556115206475254_n
பைரவா திரைப்படம் தமிழ்சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பரதன் விஜய்யை வைத்து எட்டு வருடங்களுக்கு முன்பு “அழகிய தமிழ்மகன்” மூலம் முதல் முறையாக விஜய்யை இரண்டு வேடங்களில் நடிக்கவைத்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை இதனால் விஜய் இவருக்கு எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளார். அது மட்டும் அல்ல இதில் விஜய் முதல் முரையாக படம் முழுவதும் விக் வைத்து நடித்துள்ளார்.
14563416_1142843232450306_5259189511426462874_n
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர் மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹிரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். வில்லனாக டேனியல் பாலாஜி நடித்துள்ளார், இவர் வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு சரியான வாய்ப்பு அமையாததால் இந்த படம் இவருக்கு ஒர் ரிஎன்டரி என்று தான் சொல்ல வேண்டும்.
14632838_1142844229116873_9025783423209031346_n
இத்திரைப்படத்தில் பாடல்களை பொருத்தவரை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், மொத்த பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். குறிப்பாக பட்டைய கிளப்பு பட்டைய கிளப்பு பட்டி தொட்டியெங்கும் பட்டைய கெளப்பு என்ற பாடல் நிச்சயம் பட்டைய கிளப்பும் என்கிறார்கள்.
14642447_1142844135783549_8177109811236834914_n
சண்டை காட்சிகள் அனைத்தையும் அனல் அரசு அமைத்துள்ளார், இத்திரைப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் கதையை பொறுத்தவரை சமூகத்தில் இன்றைக்கு நிலவும் முக்கிய பிரச்சனையை குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.
வரும் ஜனவரி பொங்களுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article