சென்னை: அதிமுகவில் கடந்த 5ஆண்டுகளாக இழுபறியுடன் நீடித்து வந்த இரட்டை தலைமை ரத்து செய்து இன்றைய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதுடன், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஜெ.மறைவுக்கு பிறகு, இரட்டை தலைமையுடன் முட்டல் மோதல்களுக்கு இடையே நீடித்து வந்த அதிமுகவில், 5ஆண்டுகளுக்கு பிறகு, இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை ரத்து செய்யப்பட்டு ஒற்றை தலைமை உருவாக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை திட்டமிட்டபடி 9.15மணக்கு தொடங்கியது. மு  தொடங்கியுள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன்  தலைமையில், செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் இரட்டை தலைமை நீக்கம், மீண்டும் பொதுச்செயலாளர் பதவ உள்பட  16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், பொதுக்குழுவிலும் நிறைவேற்ற  ஒப்புதல் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.  இதே போல, துணைச் செயலாளர் பொறுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கட்சிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி உருவாக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு துணைப் பொதுச்செயலாளர் பதவியாக மாற்றப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவியில் போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். விதி 45- இல் மாற்றம்- கழக பொதுச்செயலாளர் என்பவர் கட்சி உறுப்பினர்களாலேயே தேந்தெடுக்கப்படுவார் என்பதில் திருத்தம் மேற்கொள்ளவோ, தளர்த்தவோ முடியாது.

பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர் 5ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். கட்சியின் துணைப்பொதுச்செயாலளரை கழக பொதுச்செயலாளர் நியமிப்பார்.

மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை பதவிகளை ரத்து செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதிமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், இரட்டைத் தலைமை நீட்டித்தால் வளர்ச்சி இருக்காது என்று கருத்து பொதுக்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து,  நான்கு மாதத்தில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளார் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் விதிகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரங்கள்:

அதிமுகவின் பொதுச்செயலாளர், நிர்வாக ரீதியிலான அனைத்து பொறுப்புகளையும் நிர்வகிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்.
  • இந்தத் தேர்தலில் கலந்துகொள்ள, 10 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகளின் பணியாற்றி இருக்க வேண்டும்

போட்டியிடுபவர்களை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும்.

மாவட்டச் செயலாளர் ஒரு வேட்பாளரை மட்டுமே முன்மொழியவும், வழிமொழியவும் முடியும்

இந்த தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம்

துணைச் பொதுச் செயலாளகளை பொதுச் செயலாளர் நியமனம் செய்வார்.