சென்னை: அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதை புறக்கணித்த ஓபிஎஸ், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளங்களுடன் புகுந்த நிலையில், அங்கிருந்த அனைத்து ஆவணங்களையும் தனது வாகனத்தில் ஏற்றினார்.  இது பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் கூட்டத்திற்கு வருகை தரவில்லை. ஆனால், அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். இதனால், அங்கிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் , கல்வீச்சு, கத்திக்குத்து சம்பவங்கள் நடைபெற்றன. இதையடுத்து அதிமுக தலைமைவலகம் பூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கலவலத்திற்கு மத்தியில், அதிரடிப்படை பாதுகாப்புடன் ஓபிஎஸ், பூட்டை உடைத்து கட்சியின் தலைமை அலுவகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் புகுந்தார்.  அஅதிமுக தலைமை அலுவலக பால்கனியிலிருந்து தனது ஆதரவாளர்களை பார்த்து ஓபிஎஸ் கையசைத்தார். இதையடுத்து,  மீண்டும் அலுவலகம் வெளியே கூயிருந்த  இரு தரப்பினருக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. எடப்பாடி படம் இடம்பெற்ற பதாகையை கிழித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தீ வைத்து எரித்தனர். இதையடுத்த அவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர், விரட்டி அடித்தனர்.

இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒபிஎஸ், தனது ஆதரவாளர்களைக்கொண்டு, கட்சி அலுவலகத்திற்குள் இருந்த அனைத்து ஆவணங்களையும், தனது வாகனத்தில் எற்றினார்.  மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட ஈபிஎஸ் ஆதரவாளர்களான  மாவட்ட செயலாளர் வி.என்.ரவி. உள்பட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.