சென்னை,
டுத்த ஆண்டு முதல் பிளஸ்-1, பிளஸ்-2க்கு புதிய பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக கல்வி அமைச்சர் கூறினார்.
மேலும், டெட் ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்க ல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசின் டெட் தேர்வு குறித்த அரசாணை செல்லும் என்று தீர்ப்பு கூறி உள்ளது. எனவே கூடிய விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.
மேலும் வரும் கல்வி ஆண்டு முதல்  பிளஸ்-1, பிளஸ்டூ வகுப்புகளுக்கு  புதிய பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அவர் அலுவலகம் வந்து கையெழுத்திட்டவுடன் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.