டில்லி,
ல்லிக்கட்டுவிளையாட காளைகளை ஏன் துன்புறுத்த வேண்டும்? வீடியோ கேமில், கம்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாடலாமே என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
‘‘ஜல்லிக்கட்டை வீடியோ கேமில் விளையாடலாம், இதற்கு ஏன் காளைகளை பழக்கப்படுத்த வேண்டும்?’’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு கடந்த வருடம் ஜனவரி மாதம் 8ம், ஜல்லிக்கட்டு விளையாட அனுமதி அளித்து  அறிவிப்பு வெளியிட்டது.
மத்தியஅரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து,  பீட்டா அமைப்பான  விலங்கு நல வாரியம் மற்றும் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
jallikattu1
இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூலை 26ம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு வழக்கு நேற்றும் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்பான விசாரணையின் போது, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் இடையே கடும் வாதம் நடந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மனிதர்களின் பொழுதுபோக்குக்காக ஒரு விலங்கை எப்படி பயன்படுத்துவீர்கள்? காளைகளை துன்புறுத்தும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க முடியாது;
அது, பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
ஒரு புறம், பசுக்கள் கொல்ல கூடாது, பசு பாதுகாப்பு என்று மத்திய அரசு கூறுகிறது; மறுபுறம், காளை களை துன்புறுத்தும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கிறது. இது அரசின் இரட்டைவேடத்தையே காட்டுகிறது.
ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு என்று கூறினா லும், அதை ஏற்க முடியாது. உங்களுக்கு விளையாட வேண்டுமானால், கம்ப்யூட்டரில் விளையாடுங்கள்; காளைகளை ஏன் துன்புறுத்துகிறீர்கள்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மன் கூறுகையில், ‘‘அறிவிப்பு வெளியிடுவதன் மூலம், உச்ச நீதிமன்றத்தின் கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையை அகற்றிவிட முடியாது. ஆனால் விலங்குகளை விளையாட்டில் ஈடுபடும் பட்டியலில் சேர்க்க அரசுக்கு அதிகாரம் உள்ளது’’ என்றார்.
jallikattu-story
தமிழ்நாடு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே வாதிடுகையில், ‘‘மராத்தான் போன்ற விளையாட்டு களில் மனிதர்கள் ஈடுபடும்போது, காளைகளை ஏன் அதுபோல் ஈடுபட வைக்க முடியாது?’’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள்,
காளைகளை காட்சி விலங்குகள் பட்டியலில் , இருந்து நீக்கியது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் அரசியலமைப்பு சட்டத்தையும் மீறியதாகும்.
மனிதர்களின் பொழுதுபோக்குக்கு காளைகளை  பயன்படுத்துவதை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு என்ற வாதத்தையும் ஏற்க முடியாது.
உங்களுக்கு விளையாடவேண்டுமானால், கம்ப்யூட்டரில் விளையாடுங்கள். 
‘‘மனிதர்கள் தங்கள் இஷ்டப்படி செயல்படலாம்.
ஆனால் காளைகள் வலுக்கட்டாயமாக பந்தையங்களில் ஈடுபடுத்தப்படுகின்றன. மனிதர்களின் பொழுதுபோக்குக்காக காளையை பழக்கப்படுத்த முடியுமா?
ரோமன் கிளாடியேட்டர் வகை விளையாட்டுக்களை இந்தியாவில் அனுமதிக்க முடியாது.
இது போன்ற விளயைாட்டுகளுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி வீடியோ கேம் உருவாக்கலாம்.
இதற்காக காளைகளை ஏன் பழக்கப்படுத்த வேண்டும்’’ என கூறினர்.
இதையடுத்து அடுத்த விசாரணை வரும் 26ந்தேதி நடைபெறும் என நீதிபதிகள்  அறிவித்தனர்.