சென்னை,
மிழ்நாட்டில் மின் கட்டணம் கட்ட மேலும் ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து அரசு அறிவித்து உள்ளது.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளடிதத்  தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நுகர்வோர்கள் கட்டணத்தை செலுத்த கால கெடு நீட்டிப்பு அறிவித்து உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு  மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
8-ந் தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய அரசு முடிவு செய்துள்ளது. எனினும் 100, 50, 20, 10, 5, 2 மற்றும் 1 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாவதில் எந்த பாதிப்புமில்லை.
இந்திய அரசின் செய்திக்குறிப்பில்,  அரசு மருத்துவமனை, அரசு மருத்துவமனை மருந்தகம் (மருத்துவர் சீட்டின் பேரில்), ரெயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் நுழைவாயில்கள், விமான பயணச்சீட்டு நுழைவாயி்ல்கள், அரசு பேருந்துகள், பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு நிலையங்கள், மாநில அல்லது நடுவண் அரசின் அங்கீகரிக்கப்பட்டுள்ள கூட்டுறவு அங்காடிகள், மாநில அரசு பால் அங்காடிகள், சுடுகாடு, இடுகாடு மைதானம் போன்றவற்றில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளில் வராததால்,
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் 09-11-2016 முதல் வசூலிக்கப்பட மாட்டாது.
tneb2
எனினும் மின்நுகர்வோர்களின் வசதிக்காக கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகிறது.
தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் வருகிற 9-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையாக இருப்பின் அந்த இறுதிநாள் மேலும் ஒரு வாரத்திற்கு கீழ்க்கண்டவாறு சிறப்பு சலுகையாக நீட்டிக்கப்படுகிறது.
இத்தருணத்தில் மின்கழகம் தாமதக் கட்டணமின்றி வசூலிக்கப்படுவதோடு மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் 9-ந் தேதியாக இருந்தால் அது 16-ந் தேதி ஆகவும், அவ்வாறே கடைசி நாள் 30-ந் தேதியாக இருப்பின் 7-ந் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு தற்போதைய மாதத்தின் மின் பட்டியலுக்கு பணம் செலுத்த தவறும் தாழ்வழுத்த மின்நுகர்வோர் கள் (அதாவது 8-ந் தேதி வரைக்கும் மின்கட்டணம் கட்ட கடைசி நாளாக இருப்பவர்களுக்கு ) மற்றும் மின்கட்டணம் கட்ட வருபவர்களையும் 16-ந் தேதி வரை மின்கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.
எனினும் அவர்களுக்கு 8-ந் தேதி வரை தாமத கட்டணம் மற்றும் மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் 9-ந் தேதி முதல் செலுத்தவிருக்கும் ஒப்பந்த புள்ளிகளுக்கான வைப்புத்தொகை பணமாகவோ அல்லது இதர வகையில் பெறவிருக்கும் தொகையினை 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக வசூலிக்கப்படமாட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.