இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது .
இந்த படத்தில் ரஜினிகாந்த் மனநல மருத்துவர் சரவணன் கேரக்டரிலும், ராகவா லாரன்ஸ் வேட்டையன் கேரக்டரிலும் நடிக்கவுள்ளனர்.
மேலும் முதல் பாகத்தில் நடித்த ஜோதிகாவை மீண்டும் சந்திரமுகி கேரக்டரில் நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவர் சம்பளம் மிக அதிகமாக கேட்டதால் இந்த படத்தில் அவருக்கு பதிலாக சந்திரமுகி கேரக்டரில் சிம்ரன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சந்திரமுகி முதல் பாகத்தில் முதலில் சந்திரமுகி கேரக்டரில் நடிக்க சிம்ரன் தான் ஒப்பந்தமாகி இருந்தார் என்பதும், ஆனால் திடீரென சிம்ரன் கர்ப்பம் ஆனதால் அந்த படத்தில் இருந்து அவர் விலகினார் என்பதும் அதன் பின்னரே ஜோதிகா இந்த படத்தில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் மிஸ் செய்த வாய்ப்பை தற்போது இரண்டாம் பாகத்தில் சிம்ரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.