'தலைவன் இருக்கின்றான்' படத்தில் நான் இல்லை ; கமலின் ஆஸ்தான நாயகி அறிவிப்பு….!

Must read


நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படம் ‘தலைவன் இருக்கின்றான்’. தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் உருவாகிறது .
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது. தேவர்மகன் முதல் பாகத்தில் நாசர் இறந்துவிட்ட நிலையில் அவரது மகனாக தான் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடிகைகள் ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் ஆகியோரும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க உள்ளனர் என தகவல் பரவி வருகிறது.
தேவர் மகனில் நடித்திருந்த ரேவதி இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் மட்டுமின்றி காமெடி நடிகர் வடிவேலுவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார்.
தலைவன் இருக்கின்றான் படத்தினை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் உடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என பூஜா குமார் அறிவித்துள்ளார்.இதுபற்றி ஒரு பேட்டியில் பூஜா குமார் கூறியதாவது: தலைவன் இருக்கிறான் படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் ஒருவேளை நாளை இந்தப் படத்தில் நடிக்கவும் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்து கமலின் ஆஸ்தான நாயகி என்ற பட்டத்தைப் பெற்றவர் பூஜா குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article