தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் சிம்பு . என்னதான் திரைத்துறையினர் இவர் மீது அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தினாலும் , ரசிகர்கள் சிம்புவை நேசிப்பதில் இருந்து பின்வாங்கியதே இல்லை.

சிம்பு நடித்த திரைப்படங்கள் வசூல் அளவில் சாதனை செய்து கொண்டிருக்கும் நிலையில் சிம்பு நடித்த விளம்பர படமும் சாதனை செய்துள்ளது. பிரபல ஆன்லைன் தளமான மிந்த்ரா நிறுவனத்தின் தமிழக தூதராக இணைந்துள்ளார் சிம்பு.

பிரபல ஆன்லைன் ஆடை நிறுவனமான மிந்த்ரா என்ற ஃபேஷன் நிறுவனத்திற்காக சிம்பு நடித்த விளம்பரம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்பு இந்த விளம்பரத்தில் விதவிதமான வண்ண வண்ண ஸ்டைலிஷான ஆடைகளில் தோன்றி அசத்தியுள்ளார்.

சிம்புவுக்கு முன்னர் இதே நிறுவனத்திற்காக ஹிருத்திக் ரோஷன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் ஆகிய நடிகர்களும் சமந்தா, கியாரா அத்வானி உள்ளிட்ட சில நடிகைகளும் நடித்திருந்தனர் என்பதும், ஆனால் அவர்கள் நடித்த விளம்பர வீடியோக்களை விட சிம்பு நடித்த விளம்பர வீடியோ அதிகமான நபர்களால் ரீடுவிட் செய்யப்பட்டு உள்ளது என்பதும் அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.