சிம்பு பர்த் டே: வெளியான மாநாடு வீடியோ

சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3 அன்று, மாநாடு படத்துக்கு தான் தயாரான விதத்தை வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.
ஆறு மாத குழந்தையக திரையுலகில் அறிமுகமான சிம்பு சிறுவனாகவும் சில படங்களில் நடித்தார். பிறகு நாயகனாக உயர்ந்தார். தற்போது தமிழ்த் திரையுலகில் முக்கிய நாயகனாக இருக்கிறார்.
இடையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஸ் காமாட்சி தயாரிப்பில் அவர் நடித்த மாநாடு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
தற்போது பத்து தல, கொரோனா குமார், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார் சிம்பு.
இந்நிலையில் சிம்பு, மாநாடு படத்துக்கு எப்படி தயாரானார் என்கிற மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
இது மேக்கிங் வீடியோ பார்ட் 1 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பார்ட் 2வும் வெளியாக உள்ளது என தெரிகிறது.
சுமார் ஆறு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் சிம்பு படத்திற்காக எப்படி தன்னை தயார் படுத்திக்கொண்டார் என்பதை விளக்குகிறது.
வெளியான ஒரு நாளிலேயே பல லட்சம் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.
அந்த வீடியோ..
– டி.வி.சோமு