“அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட விவகாரத்தில் தவறு என் மீதுதான்.. அதற்காக மன்னித்துவிடுங்கள்” என்று நடிகர் சிம்பு பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார்.

மைக்கேல் ராயப்பன் தயாரித்து, சிம்பு நடித்த திரைப்படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சரியாக வராமலும்,  கதையில் தலையிட்டும் சிம்பு ஏற்படுத்திய பிரச்சினையால் தனக்கு 20 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இதனால் தயாரிப்பாளர் சங்கம், சிம்புவுக்கு ரெட்கார்ட் விதிக்க தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காமெடி நடிகர் சந்தானம், ஹீரோவாக நடித்துள்ள சக்கபோடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தில்  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிம்பு, “அஅஅ பட விவகாரத்தில் நான்தான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்,” என்று  மேடையிலேயே பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

மேலும், “எனக்கு மோசடி விளையாட்டு தெரியாது. ஆனால் எல்லோரும் என் மீதே குற்றம் சொல்கிறார்கள்.  ஆனாலும்.. நான் எதுவும் இல்லாமல் யாராவது சொல்வார்களா… என் மீதும் தவறு இருக்கிறது. அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். ஏஏஏ படம்  தோல்வி அடைந்தது உண்மைதான். ஒப்புக்கொள்கிறேன்.  அது ரசிகர்களுக்காக ஜாலியாக செய்த  படம். அந்தப் படத்தினஅ தோல்விக்காக  நான் வருத்தப்படவில்லை. அடுத்தடுத்த படங்களில் இந்தத் தடுமாற்றம் சரியாகிவிடும்.

 

ஒரு பாகமாக முடிய வேண்டிய படம் சில காரணங்களால் ரெண்டு பாகமாக ஆகிவிட்டது.  அதனால் கொஞ்சம் கூடுதலாக செலவாகிவிட்டது. இதனால் தயாரிப்பாளறுக்கு வருத்தம்.. எங்களுக்குள்  மனக்கசப்பு.

 

ஆனால்,பிரச்னைகளை படப்பிடிப்பின்போது சொல்லியிருக்கலாம், அல்லது பட வெளியீட்டுக்குப் பிறகு  சொல்லியிருக்கலாம், ஒரு மாதம் கழித்து சொல்லியிருக்கலாம், ஆனால்.. ஆறு  மாதத்திற்கு பிறகு யாரோ சொன்னார்கள் என்று சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது. அதையும் மீறி நான் தவறு செய்திருந்தால் இந்த மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

 

நான் நல்லவன் என்று எப்போதும் சொன்னதில்லை.. சொல்லவும் மாட்டன். நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியும்., பரவாயில்லை. நான் இனிமேல் நடிக்க முடியாது என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு அது பற்றித் தெரியவில்லை.

 

இயக்குநர் மணிரத்னம் என்னை நடிக்க அழைத்திருக்கிறார்.   எந்த நம்பிக்கையில் கூப்பிடுகிறார் என்று தெரியவில்லை. அவர் படத்தில் நடிக்க நான் ஆர்வமாகத்தான் இருக்கிறேன். ஒருவேளை நடிக்க முடியாவிட்டால் பரவாயில்லை. வேறு ஏதாவது செய்துவிட்டுப் போகிறேன்.

 

நான் நடிப்பது நிச்சயமாக எனக்காக இல்லை. என் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தத்தான். நடிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு சேவை செய்து விட்டுப்போகிறேன். நடிப்பதை தடுக்கலாம் ஆனால் நான் மக்களுக்கு சேவை செய்வதை எவனாலும் தடுக்க முடியாது.

 

வேறு மொழிகளில் நடிப்பேன். ஏதோ ஒரு வழியில் ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்துவேன்” என்று ஆதங்கத்துடன் பேசி முடித்தார் சிம்பு.