சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதா

பிரபல தமிழ் கவர்ச்சியாக வலம் வந்தவர் சிலக் ஸ்மிதா.   1970களில் திரைத்துறையில் மேக் அப் அஸிஸ்டண்ட் ஆக புகுந்தார். வினு சக்ரவர்த்தியின் வண்டிச் சக்கரம் திரைப்படத்தில்,  சாராயக்கடையில் பணிபுரியும் “சிலுக்கு” என்ற கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்தார்.  அந்த பெயரே இவருக்கு நிலைத்துவிட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். ஆகப்பெரும்பாலும் கவர்ச்சி வேடங்கள்தான்.
ஒருகட்டத்தில், “கேமரா இல்லாமல் கூட சினிமா எடுத்துவிடலாம். சில்க் இல்லாமல் எடுக்கமுடியாது” என்று சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தார்.
1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி, திடீரென தற்கொலை செய்துகொண்டார். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவும் அதிர்ச்சியில் உறைந்தது.
அஞ்சலி போஸ்டர்
அஞ்சலி போஸ்டர்

அந்த காலகட்டத்தில் தென்னிந்திய இளைஞர்களுக்கு அவர்தான் கனவுக்கன்னி.
இன்னம் அவரை மறக்காத கனவுக்கண்ணர்கள், இன்று சில்க் ஸ்மிதாவுக்கு அடித்திருக்கும் போஸ்டர் என்று வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது இந்த படம்.