லண்டன்:

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக செயலாற்றி வருகிறது. இவரது மோசமான வர்ணனை காரணமாக இவர்மீது பல்வேறு முறை சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் குறித்த மோசமாக வர்ணனை செய்ததால், அவர்மீது கோபம் கொண்ட ரசிகர்கள், அவரை நீக்கம் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து சஞ்சய் மஞ்ச் ரேக்கரை நீக்கக் கோரி இணைய தளத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

தோனி குறித்து தொடர்ந்து அவதூறு பேசி வருவதால்,  சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கிரிக்கெட் வரலாற்றை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே ஐபிஎல்  இறுதிப் போட்டியில்1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி  4-ஆவது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி.

அந்த ஆட்டத்தின்போது,  வர்ணனையாளர்  சஞ்சய் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, மும்பை யின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, பல நுணுக்கங்களை கூறிக்கொண்டு இருந்தார். இது பலருக்கும் அதிருப்தியை கொடுத்தது.

சஞ்சய் வர்ணனையாளரா? அல்லது மும்பை அணியின் பயிற்சியாளரா? என்று பலரும் டிவீட் செய்தனர். மும்பை வீரர்களுக்கு அருகில் அமர்ந்துக்கொண்டே மும்பை அணியை சஞ்சய் ஊக்கப்படுத்தலாமே? ஏன் வர்ணனையாளர் அறைக்குள் அமர்ந்திருக்கிறார்  என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், தற்போதைய உலக கோப்பை போட்டிகளில் அவரது வர்ணனை இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மேலும் கோப்பை ஏற்படுத்தி உள்ளது.