லண்டன்:

ர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு அறிவித்து உள்ளார்.

உலக கோப்பை கிரிகெட் அணியில், அவரது பெயர் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தனது ஓய்வு அறிவிப்பை அம்பதி ராயுடு வெளியிட்டு உள்ளார்.

நடப்பு உலககோப்பை தொடருப்பான இந்திய அணியில் தமிழக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிருப்தி அடைந்த ராயுடு, அது தொடர்பாக  டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிட்டார். அதில், விஜய் சங்கரை 3டி வீரர்  என்று கிண்டல் செய்திருந்தார். அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

இந்திய வீரர் தவான் காயம் காரணமாக உலக கோப்பை போட்டித் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அம்பதி ராயுடு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ரிஷப்பந்த் அறிவிக்கப்பட்டார்.

அதுபோல, தமிழக வீரர் விஜய்சங்கர் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, விலகிய நிலையில், அவருக்கு பதிலாகவாவது அம்பதி ராயுடு இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டார். இது கிரிக்கெட் அணி வீரர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

ஏற்கனவே இந்திய அணியில் 4வதாக இறங்கும் வீரர் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், .ஆந்திராவை சேர்ந்த வீரர் அம்பதி ராயுடு, அந்த இடத்தை பிடிக்க பெரும் முயற்சி செய்து வந்தார். ஆனால், அந்த இடத்தில் கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர் உள்ளிட்ட பலர் வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.அம்பதி ராயுடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.