லண்டன்:

டப்பு உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர் தோனியின் அணுகுமுறை சரியில்லை என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கள் விமர்சித்து உள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், இதுவரை ஆடிய போட்டிகளில் இங்கிலாந்தை தவிர அனைத்து ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக தோனியின் ஆட்டம் குறித்து வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில், தொடக்கத்தில் சிறப்பாக ஆடி வந்த இந்திய அணியினர் 350 ரன்களுக்கு மேல் குவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், நேரம் ஆக ஆக  சொதப்பத் தொடங்கினர். இதனால் 314 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த ஆட்டத்தின் போது தோனியின் மந்தமான ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.  ஆட்டத்தின்மீது கவனம் செலுத்தாமல், ஏனோ தானோவென்று ஆடி வருவதாகவும், பந்துகளை தேவையின்றி வேஸ்ட் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆட்டத்தின் இறுதி ஓவர் வரை இன்னிங்ஸை எடுக்க முயன்றார். ஆனால், இறுதி ஓவரில் அவரால் ஒரு ரன்கூட எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக தோனிக்கு என்ன ஆச்சு? அவரது அதிரடி ஆட்டம் எங்கே என்று சமூக வலைதளங்களில் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவனானன சச்சின் டெண்டுல்கரும், தோனி மீது அதிருப்தி அடைந்துள்ளார். அனுபவமுள்ள தோனியின் அணுகு முறை சரியில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

நேற்றைய ஆட்டம்  முக்கியமான இன்னிங்ஸ் என்று நான் உணர்ந்தேன்,  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோனியின் மந்தமான ஆட்டத்தை கண்டு சற்று ஏமாற்ற மடைந்தேன் என்று தெரிவித் துள்ளவர், மூத்த வீரர்கள் அதிக கவனத்துடன்  விளையாட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நேற்று ஆட்டம்  இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள சச்சின்,  கேதருக்கும் தோனிக்கும்ஜோடியின் ஆட்டம் குறித்து,  நான் மகிழ்ச்சியடையவில்லை, அது மிகவும் மெதுவாக இருந்தது. என்றவர், இதில் எனது நேர்மறையான நோக்கம் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.