மிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய திரையுலகங்களில் பிசியாக நடித்துவரும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது, யாராவது ஒரு நடிகருடன் இணைத்து பேசப்படுவது வழக்கம்.
0-copy
சினி வட்டாரத்தைத் தாண்டி கிரிக்கெட் களத்துக்குள்ளும் ஸ்ருதியின் காதல் விவகாரம் பரவியது. ரெய்னாவும் ஸ்ருதியும் காதலிப்பதாக  மும்பை பத்திரிகைகள் கிசுகிசுத்தன. “நாங்க பிரண்ட்ஸ் மட்டும்தான்” என்றனர் இருவரும்.
சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும்,ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாக தகவல் கிளம்பியது. அதை இருவரும் மறுத்து, “நா.பி.ம” என்ற அதே பல்லவியை பாடினார்கள்.
இப்போது இன்னொரு நடிகருடன் இணைத்துப் பேசப்படுகிறார் ஸ்ருதிஹாசன். துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத்தான் அவர்.
0
இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வருவதாகவும் ,காபி ஷாப், உணவு விடுதி என எங்குசென்றாலும் ஜோடியாக செல்வதாகவும் பாலிவுட் பட்சிகள் கூவுகின்றன.
பட், இவர்களும், “நா.பி.ம” என்கிறார்கள்.
ஆனால் பாலிவுட் வட்டாரம் நம்பத் தயாராக இல்லை! சமீபத்தில் இருவரும் கோவாவுக்கு ட்ரிப் அடித்தார்கள் என்று எழுதியிருக்கிறது மும்பை பத்திரிகை ஒன்று.
இந்த செய்திகளுக்காக எல்லாம் ஸ்ருதி அலட்டிக்கொள்வதில்லை. “சினிமாவுல நடிக்கவே நேரம் போதல.. இதுல லவ் வேறயா” என்று சொல்லி ஜஸ்ட் லைக் தட் கந்துவிடுகிறார்!