80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சில்க் ஸ்மீதா,சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சில்க் ஸ்மீதாவின் வாழ்க்கை மிகவும் சர்ச்சையானதாகவே இருந்தது.

இந்த நிலையில், சில்க் ஸ்மீதாவை சீரழித்த ஹீரோக்கள், என்ற தலைப்பில் நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சில்க் ஸ்மீதாவை பல ஹீரோக்கள் சீரழித்திருப்பதாக தெரிவித்திருப்பதோடு, ”பல முன்னணி ஹீரோக்கள் அவரை உடலுக்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டனர். இந்த சைக்கோக்களை எப்படி லெஜெண்ட் என்று கூப்பிட முடியும். சினிமா அரசியல் காரணமாக அவரை இழந்துவிட்டோம். உங்களை மறக்கமாட்டோம் சில்க் ஸ்மிதா.” என்று பதிவிட்டுள்ளார்.

சில்க் ஸ்மீதாவை சீரழித்த முன்னணி ஹீரோக்கள் யார்? என்ற பட்டியலை ஸ்ரீரெட்டி அந்த பதிவில் குறிப்பிடவில்லை என்றாலும் இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.