‘தர்பார்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஸ்ரீமன்…!

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துவரும் ஆக்‌ஷன் த்ரில்லர்
படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்க இதில் சுனில் ஷெட்டி, ப்ரதீக் பப்பார், தலிப் தஹில், யோகி பாபு, ஆனந்த ராஜ், போஸ் வெங்கட், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஸ்ரீமன் நடிக்கிறார். அவர், ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், “19 வருடங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறேன். என கூறியுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-