இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் சமீபத்தில் ஆண் குழந்தைக்குத் தாயானார்.

தமிழில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அறிமுகமான ஸ்ரேயா கோஷல் விருமாண்டி திரைப்படத்தில் இடம்பெற்ற “உன்ன விட” என்ற பாடலின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார். இந்திய அளவில் மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் அனைவரின் இசையிலும் பாடியுள்ளார் ஸ்ரேயா கோஷல்.

சிறந்த பின்னணி பாடகிக்கான 4 தேசிய விருதுகளை பெற்றுள்ள ஷ்ரேயா கோஷல் 5 பிலிம்ஃபேர் விருதுகள் 9 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

கடந்த மே மாதம் 22ஆம் தேதி இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இன்று தேவ்யான் முக்கோபத்யாய் என குழந்தைக்கு பெயர் சூட்டி அந்தப் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.