“உங்கள் உண்மையான முகத்தை காட்டுங்கள் மோடி’: குமாரசாமி காட்டம்

Must read

பெங்களூரு:

ங்கள் உண்மையான முகத்தை காட்டுங்கள்  என்று பிரதமர் மோடிக்கு  கர்நாடக முதல்வர் குமாரசாமி காட்டமாக கூறி உள்ளார்.

ர்நாடகாவில் காங்.ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த நேரத்திலும் எதவும் நடக்கலாம் என்ற நிலையில், பாஜக பேரம் பேசும் இரண்டு ஆடியோக்களை வெளியிடப்பட்டு உள்ளது. இது நாடு முழுவதும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரை  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி  எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளதால், குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் பாஜக இடையூறு ஏற்படுத்தி வரும் நிலையில், 3  அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வாரிய தலைவர் பதவிகள் வழங்கப்பட்டு சமாதானப் படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 6 எம்எல்ஏக்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பாஜக பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று முதல்வர் குமாரசாமி 2 ஆடியோக்களை வெளியிட்டு அதகளப்படுத்தினார்.

ஒன்று ஜேடிஎஸ் எம்எல்ஏ மகனிடம் எடியூரப்பா பேசும் ஆடியோவும், மற்றொருன்று கர்நாடக சபாநாயகருக்கு ரூ.50 கோடி பேரம் பேசும் ஆடியோவையும் குமாரசாமி வெளியிட்டார்.

சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு ரூ.50 கோடி கொடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசை கவிழ்க்க திட்டம் வைத்துள்ளதாகவும், எடியூரப்பா கூறியுள்ளார்

இது தற்போது வைரலாகி வருகிறது.

ஆனால், கர்நாடக முதல்வர் வெளியிட்ட ஆடியோ உண்மையானது அல்ல, அது போலியானது… குமாரசாமி திரைப்படத் துறையை சேர்ந்தவர் என்பதால், போலியாக தயாரித்து ஆடியோவை வெளியிட்டு உள்ளதாக எடியூரப்பா குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த குமாரசாமி, தான் சினிமா தயாரிப்பாளர்தான்.. ஆனால் இந்த ஆடியோ போலியானது அல்ல என்று விளக்கம் அளித்தார். ஆட்சியை கவிழ்க்கும் நோக்கிலேயே பாஜக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியவர், இதன் காரணமாக மோடியின் உண்மையான முகம் தெரிய வந்துள்ளது என்றும் குற்றம் சாடட்டினார்.

பிரதமர் அனுமதியை பெறாமல் இதுபோன்ற செயலை மாநில பாஜக செய்யுமா என்று கேள்வி எழுப்பியவர்,  பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் உ ண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாட்டின் பாதுகாவலனாக இருப்பதாக கூறும் பிரதமர் மோடி, தனது உண்மையான முகத்துடன் வெளியே வாருங்கள் என்றும் குமாரசாமி பகிரங்கமாக தெரிவித்தார்.

More articles

Latest article