முகவரி பட இயக்குனர் வி இசட் துரையின் அசோசியேட் இயக்குனரின் குறும்படம் ‘குருடனின் நண்பன்’ நேற்று திரையுலக பிரபலங்களால் யூடியுபில் வெளியிடப் பட்டது.
நடிகர்கள் பிரேம்ஜி, டேனியல் பாலாஜி , கன்னிமாடம் ஶ்ரீராம் கார்த்திக், வெற்றி சுடலை, தயாரிப்பாளர்கள் பிக் பிரிண்ட் கார்த்திக், லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் அவர்கள் படத்தை வெளியிட்டு பாராட் டினர்.


“கமர்சியல் குறும்படத்துக்கு நடுவுல கன்டென்ட்டோட ஒரு சிறுகதை போல ‘குருடனின் நண்பன்’ இருந்ததாக நடிகர் டேனியல் பாலாஜி பாராட்டினார்.
கடந்த வாரம் இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு இந்த குழுவினரை வெகுவாக பாராட்டினார் வி இசட் துரை. குழுவினருக்கு தன் வாழ்த்துக் களையும் தெரிவித்துக் கொண்டார்.
டாய்னா பிக்சர்ஸ் (Diana Pictures) இதனை தன் யுடியுப் சேனலில் வெளியிட்டது.
இதில் மனோ, மில்லர் நடித்துள்ளனர். முரளி கே இயக்கி உள்ளார். கே. கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சூப்ருஜென் பால் இசை அமைத்துள்ளார். ஏவிஎஸ் பிரேம் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஒளி நாடா ட்நிறுவனm தயாரித்துள்ளது.