சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 11-ம் தேதி கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி நதிநீர் மட்டுமின்றி பல்வேறு திட்டங்களால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. தமிழகத்திற்கு ஆபத்துகளை விளைவிக்க கூடிய திட்டங்களை விரட்டி அடிக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 11-ம் தேதி கடைகள் அடைக்கப்படும். அரசியல் கட்சியினர் நடத்தும் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை பங்கேற்காது’’ என்றார். ஏப்ரல் 11ம் தேதி தான் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் கடையடைப்பு போராட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.